27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

ஈராக் பிரதமரின் இல்லத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்: மயிரிழையில் தப்பித்தார்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் இல்லத்தை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குததில் இருந்து பிரதமர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

பிரதமர் முஸ்தபா அல்-காதிமி காயமின்றி தப்பினார். ஆனால் பிரதம மந்திரியின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது ஆறு உறுப்பினர்கள் காயமடைந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

முஸ்தபா அல்-காதிமி வெளியிட்ட ருவிட்டர் பதிவில் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நான் நன்றாக இருக்கிறேன், கடவுளுக்குப் நன்றிகள், ஈராக்கின் நலனுக்காக ஒவ்வொருவரும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் என்று நான் அழைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பின்னர் அவர் ஈராக் தொலைக்காட்சியில் தோன்றினார். வெள்ளை சட்டையுடன்  அமைதியாக காணப்பட்டார். “கோழைத்தனமான ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தாயகத்தை உருவாக்காது மற்றும் எதிர்காலத்தை உருவாக்காது,” என்று அவர் கூறினார்.

ஒக்டோபர் 10 ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஈராக் தலைநகரில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ஈரான் ஆதரவு ஆயுதம் ஏந்திய போராளிகளே இந்த எதிர்ப்புக்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். இந்த குழுக்கள் தேர்தலில் தங்கள் பாராளுமன்ற அதிகாரத்தை இழந்தன. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பாக்தாத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயமான பசுமை மண்டலத்தில் உள்ள காதிமியின் இல்லத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்த பகுதியிலேயே அரச உயரதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன.

ஈராக் இராணுவத்தின் அறிக்கை ஒன்றில், “வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்” மூலம் படுகொலை முயற்சி தோல்வியடைந்ததாகவும், பிரதமர் “நல்ல ஆரோக்கியத்துடன்” இருப்பதாகவும் கூறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

Leave a Comment