26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
உலகம்

திடீர் நோயாளி; அவசமாக தரையிறங்கிய விமானத்திலிருந்து குதித்து எஸ்கேப் ஆன கில்லாடிகள்: ஐரோப்பாவிற்குள் நுழைய இதுவரையில்லாத புது உத்தி!

வெளிநாடுகளிற்குள் சட்டவிரோதமாக நுழைய பல்வேறு நூதனமான உத்திகளை குடியேற்றவாசிகளும், அவர்களின் பயணங்களை ஏற்பாடு செய்யும் முகவர்களும் திட்டமிடுவதுண்டு. அப்படி, ஸ்பெயினில் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இப்படியொரு சம்பம், இதற்கு முன் நடந்திருக்கவில்லை.

விமான பயணியொருவருக்கு உடல் நிலை சரியில்லையென நாடகமாடி, விமானம் அவசரமாக தரையிறங்கியது. விமானத்திலிருந்த 24 பேர் விமானத்திலிருந்த தப்பித்து, ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றனர். இதில் 12 பேர் கைதாகினர். 12 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

ஸ்பெயினின், Palma de Mallorca விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது.

மொரோக்கோவுக்கும் துருக்கிக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த ஏர் அரேபியா மரோக் ஏர்பஸ் A320 விமானம், அவசர மருத்துவ காரணங்களிற்காக விமானம் திடீரெனத் தரையிறங்கியது.

நோயுற்ற பயணி ஒருவருக்கு அவசரமாகச் சிகிச்சையளிப்பதற்காக  தரையிறங்கியதாகக் கூறப்பட்டது.

நீரிழிவு கோமாவினால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவரை, இன்னொரு பயணியின் துணையுடன் வெளியே அழைத்துச் சென்றபோது விமானத்திலிருந்து சில பயணிகள் திடீரெனப் பதறியடித்து வெளியேறினர்.

அவ்வாறு தப்பித்தவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். 12 பேர் மாயமாகி விட்டனர். மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டவருடன் துணையாக சென்றவரும் மாயமாகி விட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு எந்த கோளாறும் இல்லையென்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

மருத்துவ அவசரம் என்று பயணி கூறியது பொய், சட்டவிரோத குடியேற்றவாசிகளிற்கு உதவுவதற்காக அப்படி செயற்பட்டார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7:00 மணியளவில் (1800 GMT) விமானத்தில் இருந்து 21 பயணிகள் இறங்கி ஓடுபாதையில் ஓடிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து, நள்ளிரவு வரை விமான நிலையத்தை மூடி, பெரும் தேடுதல் நடத்தப்பட்டது.

விமானத்திற்குள் “அவமதிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு” செய்ததற்காக மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் கைதாகியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் பெரும்பாலானவர்கள் மொராக்கோ, பாலஸ்தீனியர்கள் என்று ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்து தப்பியோடியவர்கள் வான் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காதது மற்றும் ஸ்பெயினுக்குள் ஒழுங்கற்ற முறையில் நுழைந்ததற்காக வழக்குத் தொடரப்படுவார்கள். அத்துடன், அவர்கள் பிறந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது.

விமான நிலையம் மூடப்பட்டதால் 16 புறப்படும் விமானங்கள் தாமதமாகின. 13 விமானங்கள் வேறு விமான நிலையங்களிற்கு திருப்பி விடப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

Leave a Comment