கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களின் 21 மில்லியன் உயிர்களைப் பாதுகாத்ததற்காக அனைத்து குடிமக்களும் அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சீனி மற்றும் சீமெந்து விலை உயர்வை விட கொரோனா வைரஸ் மிக பெரிய பிரச்சினையாகும்.
24 வருடங்களாக நிலவும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகள் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் தீர்க்கப்பட முடியாதவை. தற்போதைய சூழ்நிலை சாதாரணமானது அல்ல, அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
நாட்டில் மக்கள் பட்டினியால் சாகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பண்டார தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1