குருநாகலில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போது திருடப்பட்ட 9 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார், மாலபேயில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், திருடப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள், வாகனத்தை திருட பயன்படுத்திய மற்றுமொரு வாகனம் ஒன்றையும், எயார் ரைபிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி, குருநாகல் – கொகரெல்ல பகுதியில் வைத்து திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிப்பதற்காக குருநாகல் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள், தாம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி குருநாகலில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைந்து வாகனத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1