உலகில் முதலாவது சந்தர்ப்பம்: அதிக நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட கழுதைப் புலிகளிற்கும் கொரோனா!

Date:

உலகிலேேய முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கழுதைப்புலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதி்க்கப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் உள்ள 22 வயதான கோஸி, 23 வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரு கழுதைப்புலிகளுக்கும் அடிக்கடி இருமல், மூக்கில் சளிவருதல், சோர்வடைந்திருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

டென்வர் உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகளுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதன்பின் மற்றவிலங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கழுதைப்புலியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

கழுதைப்புலிகள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதுவரை டென்வர் உயிரியில் பூங்காவில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வனஉயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “கழுதைப் புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடினமானது. அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை கழுதைப்புலிகள், ஆந்த்ராக்ஸ், ரேபிஸ், போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களையும் தாங்கி உயிர்வாழக்கூடியவை கழுதைப்புலிகள். அவைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வியப்புக்குரியது, மற்றவகையில் கழுதைப்புலிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் விலங்ககுளுக்கும் பரவுவது குறித்து அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், அறிவியல் உலகிற்கு கிடைத்துள்ள தகவலின்படி, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவது குறைவாகும். அதேசமயம், கொரோனாவில் பாதி்க்கப்பட்ட மனிதர்கள் விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மனிதர்கள்மூலம் பரவவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்க வேளாண் மற்றும் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுத்’ துப்பாக்கிகள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை...

காட்டு யானை தாக்குதலுக்குப் பெண் பலி: அதிகாலை வேளையில் பரிதாபம்

அம்பாறை தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம்  மொரகஹப்பள்ளம் பகுதியில்...

மஹியங்கனை வரலாற்றுச் சிறப்புமிக்க மாவரகல விகாரையில் 6 அரிய புத்தர் சிலைகள் திருட்டு!

இலங்கையின் ஊவா மாகாணம், மஹியங்கனை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவரகல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்