24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

மக்கள் எழுச்சியினால் அரசின் கொள்கைகளையும் மாற்ற முடியும்; தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்!

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும். தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா எனும் பெயரில் ஆக்கிரமித்துள்ள கேவில் முள்ளியான் பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

கேவில் பிரசே பிரதேசத்திலே காலாகாலமாக மக்கள் பயிர் செய்துவந்த காணிகளை ஜீவராசி திணைக்களத்தினர் தமது நிலங்கள் என்று சொல்லி அந்த மக்களுடைய தொழிலை பாதிக்கின்ற வண்ணமாக அந்தப் பிரதேசத்திற்கு உள்ளே உள் நுழைய கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

சில நெல் வயல்கள் ஏற்கனவே விதைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்குள்ளேயேயும் ஒருதரும் போகக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதைத்த காணியில் வேலியடைத்தவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறார்கள்.

இது சம்பந்தமாகவும் ஒரு சில விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்க அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தி யிருந்தோம். அரசாங்க அதிபர் இது சம்பந்தமாக ஏற்கனவே சில நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாக அறிவித்திருந்தார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு இந்த பிரதேசத்து விவசாயிகள் பல காலமாக இங்கே இந்த நிலங்களை விதைத்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதற்கு பதில் எதுவும் இல்லை. 1976 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் கிரமமாக இந்த பிரதேசத்திலேயே பயிர் செய்து வந்திருக்கிறார்கள்.

அதற்கான உரித்து அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே திடீரென்று வனஜீவராசிகள் திணைக்களம் வந்து இந்தப் பிரதேசத்தில் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு விடயம் இங்கே சுத்தி பார்த்தாலே தெரியும். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. வனமாக இருக்கிற இடம் வனமாகவே இருக்கிறது. ஆகவே இந்த பிரதேச மக்களே இந்தச் சுற்றுச்சூழலை மிகவும் பொறுப்பாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

இங்கே வருகின்ற பறவைகள் இப்பொழுதும் இங்கே வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது.

ஆகவே திடீரென்று நாங்கள் தான் இவற்றையெல்லாம் பாதுகாக்கிறவர்கள் என்று வன ஜீவராசிகள் திணைக்களம் வந்து இந்த மக்களுடைய வயிற்றிலே அடிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதி சம்பந்தமாக அரசாங்க அதிபரோடு பேசியது போல மற்றைய உயர் அதிகாரிகளோடும் நாங்கள் முதலிலே பேசுவோம்.

அப்படி அவர்கள் அதற்கும் இணங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

அதற்கு முன்பதாக ஏற்கனவே விதைத்த வயல்களிலேயாவது தொடர்ந்து அந்தப் பயிற்செய்கையை செய்வதிலே அவர்கள் எந்தவிதமான தடையும் விதிக்கக்கூடாது.

நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு கொண்டிருப்பது ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்க, சாதாரணமாக இயற்கையாகவே பயிர் செய்துவந்த பிரதேசங்களிலும் பயிர் செய்யவிடாமல் தடுப்பது என்பது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.

ஆகயினாலே இந்த பிரதேசத்திலே காலங்காலமாக பயிர் செய்து வந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் இந்த விடயங்களை சரியாக முகாமைத்துவம் செய்யாத காரணத்தினால்
ஏற்பட்ட விளைவனாலேயே உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டிலே உணவுப் பஞ்சம் ஏற்பட வேண்டிய தேவையே கிடையாது.

செயற்கை இரசாயனத்தை தடை செய்யவேண்டும் என்று திடீரென்று ஓரிரவிலே அதனை தடை செய்கின்ற ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.

நாங்கள் செயற்கை இரசாயனத்திற்க்கு ஆதரவானவர்கள் அல்ல. இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும். அது சுகாதாரத்துக்கு நல்லது. நிலத்துக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்படுகிறது.

பல நாடுகளிலே இருபது வருடத்திற்கான அந்த மாற்றத்திற்கான கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். 20 வருட காலமாக செய்யப்பட வேண்டிய ஒரு மாற்றத்தை ஒரு இரவிலே ஜனாதிபதி திடீரென்று விழித்து அதனை செய்ததனாலே ஏற்பட்டிருக்கிற ஒரு பிரச்சனை தான் இது.

இந்த தடவை உள்ளூர் பயிர் செய்கையினாலே வருகின்ற உணவு மக்களுக்கு போதாமல் இருக்கப்போகிறது.

ஒரு பாரிய பஞ்சம் நாட்டிலே ஏற்பட போகிறது. அதாவது உணவு பற்றாக்குறை ஏற்படப் போகிறது. இதைப்பற்றி நாங்கள் பல தடவை எச்சரிக்கை செய்திருக்கிறோம். அரசாங்கம் பிடிவாதமாக இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. ஆகையினாலே மக்கள்தான் திரண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

நாட்டிலே பல பாகங்களிலே இதற்கு எதிரான போராட்டங்கள் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. மக்களுடைய எழுச்சியினால் தான் இந்த கொள்கையை மாற்ற முடியும். தேவைப்பட்டால் அரசையும் மாற்ற முடியும் என்றார்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலை கேணி முதல் பாப்பாத்தி பிட்டி வரை 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்காவிற்க்காக சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் 600 ஏக்கர் வயல் நிலம் சுண்டிக்குளம் நன்னீர் மீன்பிடி வாசிகள், நான்கு கிராம சேவகர்கள பிரிவு மக்கள் சுமார் 1200 வரையான குடும்பங்கள் வரை வசித்து வருகின்றதுடன் அவர்கள் சமைப்பதற்கு கூட ஒரு காய்ந்த விறகையோ அல்லது தமது சொந்த காணிக்குள் கூட ஒரு பனம் மட்டையோ ஏடுத்துச் செல்ல முடியாது என்பது குறிப்பிட தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment