தமிழ் தேசிய கூட்டமைப்பு- சுவிஸ் தூதுக்குழு சந்திப்பு!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுவிற்சர்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஆசிய, பசுபிக் உதவிச் செயலாளர், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொழும்பிலுள்ள, சுவிஸ் இல்லத்தில் மாலை 5.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறும்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 எம்.பிக்களும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொள்வார்கள்.

இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியத் தூதருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இடம்பெறும்.

இதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 எம்.பிக்களும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொள்வார்கள்.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்