25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

நவம்பர் 9: தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனம்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் இன்று நண்பகல் நாவவில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூக பிரதிநிதிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பார்கள்.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு பல தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவை கோரியுள்ளோம் என்றார்.

ஆசிரியர் அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்த ஜயசிங்க, திறந்த பல்கலைக்கழகத்திற்கு எதிரே இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இணைந்து நவம்பர் 9ஆம் திகதி ‘தேசிய எதிர்ப்பு தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜயசிங்க தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment