மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘மரக்கார்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கு திடீர் விசிட் அடித்த அஜித் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் உருவாகிவரும் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்று ‘மரக்கார்’. சுதந்திர போராட்ட வீரர் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் சுமார் 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டாலும் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஓடிடியில் ரிலீசாகுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு விசிட் செய்த அஜித், மோகன்லால் பிரியதர்ஷன் உள்பட அனைவருக்கும் வாழ்த்து கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.