லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் மண்சரிவு – நான்கு வீடுகள் சேதம்

Date:

லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று சரிந்து விழுந்துள்ளது.

இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது.

அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தற்போது தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

எனினும், ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்