தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வவுனியாவிற்கு இன்று (04) விஜயம் செய்ததுடன் வவுனியா மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்திருந்தார்.
வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், துறை சார்ந்த கலைஞர்களது கருத்துக்களும் தனித்தனியாகப் பெறப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்பொருட்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுரமனதுங்க, அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க, மாவட்ட மற்றும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.