Pagetamil
இலங்கை

16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு வாகனம் விபத்து: ஒருவர் பலி!

மொன்டெரோ வாகனம் ஒன்றுவேவகக்கட்டுப்பாட்டை இழந்து கார், முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மொன்டெரோ வாகனத்தை 16 வயது மாணவன் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

‍வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன்,  4 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment