புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்ணித்தலை சிவன் ஆலயத்தினை பாதுகாக்கும் பணிகள் இன்று ஆரம்பித்த வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றது. தொல்பியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க, திணைக்கள பொது முகாமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி அபிவிருத்திக்குழு இணை தலைவரின் இணைப்பு செயலாளர், பேராசிரியர் புஸ்பரட்ணம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், ஆலயத்தின் மரபினை பாதுகாக்கும் வகையிலான வேலைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த சிவாலயமானது 11ம் நூற்றாண்டு காலத்துக்குரியது எனவும், சோழர்காலத்து சிவ வழிபாட்டுக்குரியதாகவும் தொல்லியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் குறித்த ஆலயத்தில் நீண்ட காலமாக முறையான வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை எனவும் தொல்பியல் அடையாளங்கள் காணப்படும் நிலையில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தொல்பொருள் அடையாளங்கள் மேலும் அழிவடையாத வகையில் பாதுகாக்கும் நோக்குடன் அவற்றை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.