சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து பார்த்தபோது சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் இருந்தது. பின்னர் அதை திறந்து பார்த்தபோது அதில் பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது.
சடலம் கைவிலங்கிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. உயிரிழந்த பெண் 35-40 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண் சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், தற்போது களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இடத்தை பரிசோதித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.