26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்தரதாரிகளிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசில் கடுமையான தண்டனை வழங்கப்படும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான வெளிப்படையான விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) கொழும்பில் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் பின்னணி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் வரை நாட்டிற்கு எந்த நன்மையும் ஏற்படாது என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் குறிப்பாக கர்தினால் காத்திருப்பார் என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு அதன் மூளையாக செயல்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

Leave a Comment