Pagetamil
இலங்கை

தமிழர்களின் மரபுரிமையை நல்லாட்சி பேணவில்லை; கோட்டாவின் ஆட்சியிலேயே தீர்வு!

கடந்த காலங்களில் ஒருசில கசப்பான சம்பவங்களை தடுப்பதற்கு அவர்கள் இங்கு நேரடியாக வந்து கோவிலை கட்டிக்கொடுப்பது உண்மையில் ஒரு முனேற்ற நடவடிக்கை என அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மரபுசார் தொல்பியல் எச்சங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக எமது மக்கள் ஆசைப்பட்டு ஏங்கிக்கொண்டிருக்கின்ற இந்த விடயம் இன்று நிறைவேறியிருக்கின்றது. எமது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நேரில் வந்து வடக்கு பிரதேசத்தில் இருக்கின்ற தொல்பியல் சின்னங்களை மரபுரிமை சின்னங்களை பேணிப்பார்ப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதில் குறிப்பாக ஒரு விடயத்தை சொல்ல முடியும். இந்த விடயத்தை கேட்டது நாங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில். குறிப்பாக நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்ற தருவதாக சொன்னவர்கள். இன்றைக்கு எங்களது மரபுரிமைகளைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக போய்விட்டார்கள்.

ஆனால் எவரும் எதிர்பார்க்காத இந்த அரசாங்கம். இன்று எங்களுடைய மரபுரிமைகளையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக இந்த அரசாங்கத்திற்கும் அமைச்சருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் ஒருசில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது. அதனை தடுப்பதற்கு இந்தமாதிரியான நடவடிக்கைகள் அதாவது அவர்கள் இங்கு நேரடியாக வந்து கோவிலை கட்டிக்கொடுப்பது உண்மையில் ஒரு முனேற்ற நடவடிக்கை. அதற்கு நிச்சயமாக நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு

east tamil

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

Leave a Comment