26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

நீதியமைச்சர் அலி சப்ரி பதவியை துறக்கிறார்?

நீதியமைச்சர் அலி சப்ரி, தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையினால், கடுமையான அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே, நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதும் அலி சப்ரி  தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்மையில், அலி சப்ரி அளித்த பேட்டியொன்றில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி, அதன் தலைவர் நியமிக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும், தன்னைக் கலந்தாலோசிக்காமல், இதுபோன்ற பணிக்குழுவை நியமித்தது குறித்து தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் கூறியிருந்தார்.

நாட்டில் சட்டங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கும் போது இவ்வாறான செயலணிகளை அமைப்பதில் அர்த்தமில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி கருதுவதாக தெரியவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

இந்தியத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர தொடர் பேச்சு!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

Leave a Comment