தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவே சில சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனினும், இதனால் அரசாங்கத்திற்கு பலன் கிட்டாது என இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை விதிமுறைகளுக்கு அடிபணியாமல், நாட்டின் மின் உற்பத்தித் துறையின் உரிமையை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு எதிராக போராடுவோம் என இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் எச்சரித்துள்ளார்.
துறைமுகங்கள், எரிபொருள், தபால் உள்ளிட்ட 12 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக வகைப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ஜயலால், அரசாங்கம் ஏற்கனவே எரிசக்தி துறையின் கட்டுப்பாட்டை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் மின் உற்பத்தித் துறையில் தலையீடு செய்வதாக உறுதியளித்து அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.