25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பேஸ்புக் நிறுவனம் பெயரை மாற்றியது: இனி மெட்டா!

பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய பெயராக மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தலைமை செயல் அதிகாரி மார்க்சூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் இணைய உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் பேசியதாவது:-

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக “மெட்டா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதே சமயம் தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

Leave a Comment