சதொச தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்குகள் தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகள் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் புத்திக ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தின் போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அமைச்சர் மற்றும் பலருக்கு எதிராக ஐந்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இதுவரை மூன்று வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, மற்ற இரண்டு வழக்குகள் தொடர்பாக டிசம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும்.