யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பூது வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொன்னுத்துரை காண்டீபன் (40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த இவர், தற்போது வதிரியில் வசிக்கிறார். சாவகச்சேரியிலிருந்து வதிரிக்கு கப்பூது வீதியில் மோட்டார் சையிக்கிளில் சென்று கொண்டிருந்த போது பால வேலைக்காக வெட்டப்பட்ட கிடங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தார். குறுக்காக கட்டப்பட்ட சமிக்ஞையையும் தாண்டி பாலத்திற்குள் விழுந்தார்.
அவசர நோயாளர் காவு வண்டி சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்திருந்தார்.
அவரது உடைமையில் ஒரு பகுதி பாவிக்கப்பட்ட மதுபான போத்தலொன்றும் காணப்பட்டது.



