தனது வகுப்பில் உள்ள 14 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரிய உதவியாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின், பிரைட்டன் கிரவுன் நீதிமன்றத்தால் வியாழக்கிழமை (21) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஃபத்தினா ஹொசைன் (25) என்ற ஆசிரிய உதவியாளர், மாணவனுடன் உடலுறவு கொண்டது, மாணவனின் குடும்பத்தினரை மிரட்டல் மற்றும் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டை கைவிடச் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்களில் ஐந்து ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
டினா என நண்பர்களால் அறியப்பட்ட அவர், பல மாதங்களாக நீடித்த தகாத உறவை முறித்துக் கொள்ள சிறுவன் முயற்சித்த பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, சிறுவனுடனான உறவை தக்க வைக்க முயன்றிருந்தார்.
ஜூன் 2020 இல் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, ஹொசைன் தனது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராக கையாளுதல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
சிறுவனின் குடும்பத்தில் ஒருவரை வேலையில் இருந்து நீக்கி கைது செய்யும் முயற்சியில், போலி சமூக ஊடக கணக்குகளை அவர் உருவாக்கினார் என்று போலீசார் கூறுகின்றனர்.
ஹொசைன் கடந்த ஜூன் மாதம் பிணையில் வெளிவந்தார். அதன்பின், போலீஸ் விசாரணையை நிறுத்தும் முயற்சியில் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக துன்புறுத்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
போலியான சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தி, இந்த முயற்சிகளில் ஈடுபட்டார்.
அவர் சிறுவனையும் அவனது குடும்பத்தாரையும் போலியான பெயர்களைப் பயன்படுத்தி மிரட்டினார். “குற்றச்சாட்டைக் கைவிட” பணம் தருவதாகவும் கூறினார் என்று சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு ஹொசைன் சாட்சிகளைக் கையாள முயன்றார். குறைந்தபட்சம் ஒருவரை காவல்துறையிடம் பேசக்கூடாது என்று மிரட்டினார்.
அவரது “இடைவிடாத” பிரச்சாரம் இந்த ஆண்டு மார்ச் வரை தொடர்ந்தது. குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதற்கான ஆதாரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஹொசைன், நம்பிக்கையான நிலையில் இருந்தபோது சிறுவனுடன் ஒரு பாலியல் செயல்பாடுகளுடன் நீதியின் போக்கை சிதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர் தனது வகுப்பிலுள்ள மாணவர்கள் “hormonal and horny teenage boys” என்றும், அவர்கள் தன்னுடன் உறவில் உள்ளார்கள் என்றும் நண்பர்கள் வட்டத்தில் சுயதம்பட்டம் அடித்து வந்துள்ளார். இதனாலேயே பொலிசாரிடம் சிக்கிக் கெண்டார்.