இலங்கையில் நேற்று 556 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 537,201 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 554 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இருவரும் தொற்றிற்குள்ளாகினர்.
நேற்று 300 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,003 ஆக உயர்ந்தது.
தற்போது 19,544 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று 14 COVID-19 இறப்புகளும் பதிவாகியுள்ளன, நாட்டின் வைரஸ் இறப்பு எண்ணிக்கை 13,654 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1