இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையினை ஆரம்பித்து, 2021 ஒக்ரோபர் 31 முதல் 2021 நவம்பர் 12 வரையில் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா மற்றும் சிறிலங்கா அதிகாரிகளை சர்வதேச அதிகாரவரம்பு கொள்கையின் கீழ் கைதுசெய்வதற்கான பிடிவிராந்தை வெளியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு பிரித்தானிய தேசியப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதிநிதித்துவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLP (GRC) என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த ஆவணங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
அவர்களால் அனுப்பப்பட்ட ஆவணத்தின் தமிழ் வடிவம் வருமாறு-