25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
உலகம்

கனடா பாதுகாப்பு அமைச்சராக தமிழக பின்னணியுடைய அனிதா ஆனந்த்!

கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார்.

இதையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. அமைச்சரவையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதாகும் அனிதா ஆனந்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சி சார்பில் ஓக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46% வாக்குகள் பெற்றார்.

முன்னதாக, கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் அமைச்சராக பணியாற்றியதுடன் சுகாதாரப் பேரிடரின்போது சிறப்பாகப் பணியாற்றியவர் என்ற பெருமையை அனிதா ஆனந்த் பெற்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

Leave a Comment