நியூசிலாந்து ஊழியர்களில் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியோரின் வீதத்தை அதிகரித்துள்ளது.
ஊழியர்களில் 40 வீதமானவர்கள் கொரோனாவிற்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் தங்கள்
வேலைகளை இழக்க வேண்டிவரும்.
ஏற்கனவே ஊழியர்களில் 15 வீதமானவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று நியூசிலந்து கூறியிருந்தது.
உணவகங்கள், இசைக்கூடங்கள், உடற்பயிற்சி இடங்கள், முடி திருத்தும் கடைகள் ஆகிய இடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அது பொருந்தும்.
வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கருத்தில்கொண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
COVID-19 முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர நியூசிலந்தில் மொத்தம் 90 வீதமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பது அவசியம்.
ஆசிரியர்களுக்கும் சுகாதார வல்லுநர்களுக்கும் கட்டாயமாக தடுப்பூசி போடும் அறிவித்தலை முன்னதாக அந்த நாடு பிறப்பித்திருந்தது.
நியூசிலாந்து ஊழியர்களில் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்கவேண்டியோரின் வீதம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.