26.4 C
Jaffna
March 29, 2024
இந்தியா

இந்தியாவில் பரவும் புதிய உருமாறிய கொரோனா AY.4.2

AY.4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏAY.4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக, டெல்டா வகையின் ஒரு பகுதியான இந்த வைரஸ் இருந்தது.

மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஒக்டோபரில் முதலில் தென்படத் தொடங்கிய பி.1.617.2 எனப்படும் டெல்டா வகை உருமாறிய கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அதில் ஒன்றான AY.4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் புதிய தொற்று தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுகுறித்து கூறியதாவது:

பிரிட்டனில் கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கையை அதிகரித்ததாக நம்பப்படும் டெல்டா டெல்டா வகை கொரோனா வைரஸ் துணை வகையான AY.4.2 குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

ஒரு குழு கோவிட்-19 AY.4.2 பற்றி ஆராய்ந்து வருகிறது. ஐசிஎம்ஆர் உள்ளிட்ட குழுக்கள் வெவ்வேறு வகைகளை பகுப்பாய்வு செய்கின்றன.

உலக சுகாதார நிறுவவனம் AY.4.2 டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது என்பதால் அதை ஆராய்ந்து வருவதாகக் கூறியது, இருப்பினும் இது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவோ அல்லது தடுப்பூசிகள் பயனற்றதாக இருந்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment