புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் பாப்லோ பிக்காசோவின் 11 ஓவியங்கள் ஏலத்தில் 108.9 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளன.
நேற்று (24), அமெரிக்காவின், லாஸ் வேகஸில் இடம்பெற்ற Sotheby’s ஏலத்தில் அவை விற்கப்பட்டன. மறைந்த ஸ்பானிய ஓவியக் கலைஞரான பிக்காசோவின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு அந்த ஏல நிகழ்ச்சி இடம்பெற்றது.
சிவப்பு-ஒரேஞ்ச் நிறத் தொப்பி அணிந்த பெண் – என்ற அவரது ஓவியத் தொகுப்பு, அவருடன் உறவு வைத்திருந்த மேரி-தெரேஸ் வோல்டர் என்ற பெண்ணைச் சித்திரிக்கும் ஓவியங்களைக் கொண்டது.
ஓவியங்களில் ஒன்று Sotheby’s ஏலத்தில் எதிர்பார்த்ததைப் போன்று சுமார் இரு மடங்கு விலையில், 40.5 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது.
பிக்காசோவினுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட மேலும் சில ஓவியங்களும் மில்லியன் கணக்கான டொலருக்கு விற்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1