சீனாவில் நேற்று (24) நடைபெறவிருந்த வூஹான் மரதன் ஓட்டம், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அங்கு மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வூஹான் மரதன் ஓட்டப் பந்தயத்தில் 26,000 பேர் கலந்துகொள்ளவிருந்தனர்.
அதற்குப் பதிவுசெய்தோரின் முன்பதிவுக் கட்டணத்தைத் திரும்பத் தருவதாக ஏற்பாட்டாளர்கள் உறுதிகூறினர்.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த நாடு எடுத்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.
மக்களிடையே பரவலாகக் பரிசோதனை நடத்துவது, குறிப்பிட்ட இடங்களை முடக்குவது போன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1