ஆர்யன் கான் போதைப்பொருள் வாங்க அனன்யா பாண்டே உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து அனன்யா பாண்டே வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் விவாதத்தில் இந்தி நடிகை அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்று இருந்தது.
ஆர்யன் கான் போதைப்பொருள் வாங்க அனன்யா பாண்டே உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து அனன்யா பாண்டே வீட்டில் சோதனை நடத்தினர். அவரை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விஜய் படத்தில் இருந்து அனன்யா பாண்டே நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில்தான் முக்கிய வேடத்தில் நடிக்க அனன்யா பாண்டேவை ஒப்பந்தம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், எனவே அவரை படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.