அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை இன்று நடத்துகிறார்.
மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
உர நெருக்கடி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், வரவு செலவு திட்டம் மற்றும் பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி முடிவுகள் எடுக்கும் போது யாருடனும் கலந்துரையாடுவதில்லையென்ற அதிருப்தி அரச தரப்புக்குள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1