திருகோணமலை-மஹதிவுல்வெவ திவுறும்கல விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட தியான மண்டபம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (23) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யுத்தத்தினால் சேதமடைந்த பழைமை வாய்ந்த இந்த விகாரை பல வருடகாலமாக பாழடைந்த நிலையில் காணப்பட்ட போது தெவனிபியவர இந்ராராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி பொறுப்பேற்று தனியாரொருவரின் நிதி பங்களிப்புடன் தியான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
–ரவ்பீக் பாயிஸ்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1