7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சிறுமியின் தாய்மாமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20ஆம் திகதி காணமல் போனார்.
இதனை தொடர்ந்து குழந்தையின் தாய் படுகலன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் 7 வயது சிறுமி அந்த கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள முற்புதரில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் தாய்மாமனே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து முற்புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் தாய்மாமனான 25 வயது நிரம்பிய தினேஷ் ஜெட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை தினேஷ் ஜெட் ஒப்புக்கொண்டான். இந்த வழக்கு விசாரணை மீரட் நகரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தினேஷ் ஜெட்டுக்கு எதிராக 6 நாட்களில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் சிறுமியை தினேஷ் ஜெட் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுமியின் தாய்மாமன் தினேஷ் ஜெட்டுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 30வது நாளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.