31.3 C
Jaffna
March 28, 2024
இந்தியா

ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக 26 வயது மனைவியை 55 வயது நபரிடம் விலைபேசி விற்ற 17 வயது கணவன்!

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பதற்காக 26 வயது மனைவியை விலைபேசி விற்றிருக்கிறார் 17வயது கணவன். இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருப்பது ஒடிசாவில்.

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம் பெல்படா பகுதியில் 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்திருக்கிறது.

திருமணத்திற்குப் பின்னர் கூலித் தொழிலாளிகளாக இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளை வேலைக்கு சென்றிருக்கின்றனர் .

செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த போது, ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் சிறுவனுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்றிருக்கிறார்.

அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நன்றாக சாப்பிட்டு வந்திருக்கிறார். தான் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கியிருக்கிறார். மிச்ச பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார் அந்த சிறுவன்.

கணவனும் மனைவியுமாக சென்றவர்கள் தனியாக வந்து நிற்கிறாயே என்று ஊராரும் குடும்பத்தினரும் கேட்க, மனைவி தன்னை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிட்டார் என்ற கவலையுடன் சொல்லி இருக்கிறார் அந்த சிறுவன்.

பெண்ணின் குடும்பத்தாருக்கு அந்த சிறுவன் சொன்னதில் நம்பிக்கை இல்லை.

இதையடுத்து பலங்கிர் மாவட்டம் பெல்படா போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அந்த சிறுவனை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தன் மனைவியை வேறு ஒருவருக்கு விற்று விட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து ஒடிசா போலீசார் அப்பெண்ணை மீட்பதற்காக ராஜஸ்தான் பாரன் மாவட்டத்திற்கு சென்றிருக்கின்றனர்.

கிராமத்திற்குச் சென்று அப்பெண்ணை மீட்க சென்ற போது, உள்ளூர் மக்கள் போலீசாரை சுற்றி வளைத்து கொண்டு விட்டனர். பெண்ணிற்காக 1.8 லட்சம் கொடுத்திருக்கிறார் முதியவர், பெண்ணை அழைத்து போவது என்றால் அந்த பணத்தை கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று கறாராகச் சொல்லி இருக்கிறார்கள்.

பின்னர் ஊர் மக்களை சமாதானம் பேசி அந்த பெண்ணை மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் போலீசார். இதன் பின்னர் அந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
1
+1
5

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment