செவித்திறன் குறைபாடுள்ளவர்களிற்காக, எதிர்வரும் வரவு செலவு திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்ப நாடாளுமன்ற நடவடிக்கைக் குழு இன்று (22) முடிவு செய்தது.
அதன்படி, வரவு செலவு திட்ட விவாதத்தின் நேரடி ஒளிபரப்புடன் இணைந்து ஒரு சைகை மொழி சாளரம் அமைக்கப்படும்.
வரவு செலவு திட்ட விவாதத்தை சைகை மொழியில் சமர்ப்பிக்கும் பிரேரணை சபாநாயகரால் முன்வைக்கப்பட்டது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைக் குழு இன்று (22) காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1