முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற ஊடகவியலாளர்களின் அமைப்பாக காணப்படுகின்ற முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கான புதிய அலுவலகமானது நாளை(20) முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட இருக்கின்றது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய கட்டிடம் நாளையதினம் திறப்பு விழா காண இருக்கின்ற நிலைமையில் கட்டிடத்தை சூழ இராணுவப் புலனாய்வாளர்கள் சிவில் உடை தரித்த பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் சிவில் உடை தரித்த பொலிசார் வருகை தந்து நாளைய நிகழ்வு தொடர்பாகவும் யார் யார் வருகிறார்கள் எனவும் ஊடகவியலாளர்களிடம் விசாரித்து சென்றுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையமானது நாளை(20) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு p.w.d. வீதியில் திறந்து வைக்கப்படுகின்றது
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ் ரகுராம் அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து கொள்ள இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது