Pagetamil
கிழக்கு

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தமலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவல பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.பீ.பீ.த சில்வாவிற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல- கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த 21வயதுடைய இளைஞன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் தொடர்ச்சியாக இவர் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெருகலில் மீண்டும் பௌத்தமயமாக்கல், அருணின் பதில் என்ன?

east tamil

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

மணல் கடத்தியவர் கைது

Pagetamil

ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம்

east tamil

Leave a Comment