26.6 C
Jaffna
December 6, 2021
மலையகம் முக்கியச் செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தலவாக்கலையில் போராட்டம்

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (16) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன, பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், விவசாயிகளுக்கான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வரவேண்டும் எனவும் போராட்டத்தில்போது குரல் எழுப்பட்டது.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சேதன பசளை திட்டம் சீன கழிவுகளை நாட்டுக்கு கொண்டு வருதற்கா?

Pagetamil

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர், கைதடி உணவக உரிமையாளர், பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண்: வடக்கின் இன்றைய கொரோனா தொற்றாளர்கள் விபரம்!

Pagetamil

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதும் 4 கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!