29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

தமிழ்ச் சைவப் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்

இன்று கொவிட் நடைமுறைகளுடன் சைவ பரிபாலன சபையில் கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் தமிழ்ச் சைவப் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது. யாழ்.நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

மேனாள் நீதிபதி சிவத்திரு.சி. வசந்தசேனன் மருத்துவர் பரா. நந்தகுமார் ஆகியோர் தமிழ்ச் சைவ பேரவை தொடர்பாக அறிமுக உரைகள் நிகழ்த்தினர்.

மேனாள் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தமிழ்ச் சைவப் பேரவையின் திருக்கோவில்களிற்கான பொது ஒழுங்குகள் வரைபை வெளியீட்டு வைத்து உரையாற்றினார்.

சைவ பரிபாலன சபை தலைவர், சைவ மகா சபை உப தலைவர், பொருளர் திருக்கேதீச்சர நிர்வாக செயலர், யாழ் இந்துக் கற்கைகள் பீட விரிவுரையாளர் என பலரும் கருத்துரை வழங்கினர்.

ஈற்றில் அகில இலங்கை ரீதியான 5 சிவப் பிராந்தியங்களை உள்ளடக்கிய ரீதியில் தேர்வு செய்யப்பட்ட பேரவையின் முதலாவது செயற்குழு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

குரு முதல்வர்களாக நல்லை, தென்கயிலை, மெய்கண்டார், சிவகுரு ஆதீன முதல்வர்கள் நால்வரும் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

சிவஸ்ரீ பாலகைலாசநாதக் குருக்கள் சிவஸ்ரீ கிருபானந்தக் குருக்கள், சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள், சிவஸ்ரீ கி.உருத்திரபுரீசுவரக் குருக்கள் சிவத்திரு ஆறு. திருமுருகன் ஆகியோர் போசகர்களாக முன்மொழியப்பட்டனர்.

தலைவராக மேனாள் நீதிபதி சிவத்திரு. சி.வசந்தசேனனும் பிரதித் தலைவராக மேனாள் மாவட்ட அரச அதிபர் நா வேதநாயகனும் தேர்வாகினர்.

பொதுச் செயலாளராக மருத்துவர் தி. சுதர்மனும் பொருளராக திரு. த. சிவரூபனும் தேர்வாகினர்.

கிழக்கு, வன்னி, யாழ், மலையக, தென்மேல் சிவப்பிராந்தியங்களிலிருந்து 5 உபதலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இணைச் செயலாளர்கள், பத்திராதிபர் நிர்வாக உறுப்பினர்கள் என 35 பேர் கொண்ட அனைத்து சிவப்பிராந்தியங்களையும் பழமைமிக்க சைவ அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட செயற்குழு அமைப்பு உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பல வருடங்களாக பல சைவ அபிமானிகளின் கனவாகவும் சைவப் பெருமக்களின் பெருவிருப்பாகவும் இருந்த ஒன்றினைந்த அகில இலங்கை ரீதியான சைவ உயர் பீடத்தை உருவாக்கும் முயற்சியின் ஆரம்ப மைல் க்கல்லாக இப் பேரவை உருவாக்கம் கருதப்படுகின்ற நிலையில் அதன் செயற்குழு விசயதசமியிலிருந்து உத்தியோகபூர்வ பணிகளை முன்னெடுப்பது குறிப்பிடத் தக்கது

இந்த தமிழ்ச் சைவப் பேரவை ( TSP ) தன்னுடைய முதற் பணியாக திருக்கோவில் களுக்கான பொது ஒழுங்கு விதிகளை வெளியீட்டுள்ளது. சைவத் திருக்கோவில்களின் சுயாதீனத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு சைவப்பொது வெளியின் கரிசனைகளை முன் கொண்டு செல்லும் தொடர் செயற்பாடுகளை முன்னெடுப்பது என பேரவையின் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு தீர்மானித்தது.

இனிவரும் காலங்களில் பல் பரிணாமங்களில் தமிழ் சைவர்களின் விடயதானங்களை அணுகுவது என அம்மையப்பரின் திருவருளுடன் நவராத்திரி விசயதசமி நன்னாளில் உறுதி ஏற்றுக்கொண்டு கூட்டத்தை நிறைவு செய்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment