வன இலாகாவினர் இரும்புக் கம்பியால் அடித்தனர்; வாகனத்திலிருந்து விழுந்ததாக கூறுமாறு அனுப்பி வைத்தனர்: சாரதி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

Date:

தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மண் ஏற்றியமைக்காக வன இலாகா ஊழியர்கள் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டு, சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சஜிதன் என்ற (31) இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அக்கராயன் வீதியை அண்மித்த பகுதியில் ரிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வன இலாகாவினர் தன்னை இரும்பு கம்பியினால் தாக்கியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பின்னர், தமது அலுவலகத்திற்கு தன்னை அழைத்து சென்று அதன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தாக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட வேண்டாம் எனவும், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததாக கூறுமாறும் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்