கிளிநொச்சி வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூட வாயிலில் வாள்வெட்டு: ரௌடிகள் அட்டகாசம்!

Date:

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த ஒருவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த போது, சத்திர சிகிச்சை கூட வாயிலிலேயே வாள்வெட்டு தாக்குதலிற்கு இலக்கானார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று இடம்பெற்றது.

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக, சத்திரசிகிச்சை கூடத்தில் காத்திருந்தார்.

அப்போது, வாள்களை மறைத்துக் கொண்டு 3 ரௌடிகள் வைத்தியசாலைக்குள் புகுந்து, சத்திரசிகிச்சைக்காக காத்திருந்தவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.

வாள்வெட்டிற்கு இலக்கானவர், சத்திரசிகிச்சைக்கூடத்திற்குள் தப்பியோடியதால் தப்பித்துக் கொண்டார்.

மார்பு, இரண்டு கைகளிலும் அவர் வாள்வெட்டு காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

ரௌடிக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

இது குறித்து கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்