சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படம் வெற்றி பெற நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் திடீரென நேற்று இரவு இந்த படத்திற்கு பொருளாதாரரீதியில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அந்த சிக்கலை சிவகார்த்திகேயன் ஒருசில கோடிகள் செலவு செய்து தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ’டாக்டர்’ ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘நாளை என்றும் நம் கையில் இல்லை, நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே, என்றால் கூட போராடு நண்பா, என்றைக்கும் தோற்காது உண்மைகளே.. எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா இன்று ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Best wishes for the release today @Siva_Kartikeyan ! https://t.co/3hW7kgUhQl
— Suriya Sivakumar (@Suriya_offl) October 9, 2021