25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

14 வயது சிறுமிக்கு போதை ஊசியேற்றி பாலியல் சித்திரவதை!

இளம் பெண்ணொருவரால் கடத்தப்பட்ட 14 வயது சிறுமிக்கு ஹெரோயின் ஊசி ஏற்றப்பட்டு ஒரு மாதமாக தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டில் 24 வயதான இளம் பெண்ணொருவர் கைதாகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு சிட்னியில் நடந்த ஒரு விருந்தில், எல்ஹாம் நாமன் (24) என்ற இளம்பெண், அடையாளம் வெளிப்படுத்தப்படாத 14 வயதான பெண்ணை சந்தித்துள்ளார். அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சமூக ஊடகங்களில் சேர்த்தனர்.

எல்ஹாம் நாமன்

நாமன் மற்றும் 14 வயதான பெண் ஜூன் 5, 2021 மாலை மீண்டும் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஒன்றாக காரில் ஏறிய சில நிமிடங்களில், சிறுமியை வாகனத்தில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேற்கு சிட்னியில் உள்ள பரமட்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு சிறுமி  கொண்டு செல்லப்பட்டு, கொடூரமான தாக்கப்பட்டுள்ளார். யூலை 6ஆம் திகதி வரை அந்த 14 வயதான பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டு, மிரட்டப்பட்ட போதை மருந்து ஊட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் காட்டப்பட்ட ஆவணங்களின்படி, அந்த பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக  ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் நிர்பந்திக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அவருக்கு ஹெரோயின் ஊசி போடப்பட்டதாக பொலிசார் குற்றம் சாட்டினர்.

கிரீன்அக்ரே யூனிட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீயால் சுடப்பட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அணிந்திருந்த ஹிஜாப்பிற்கு தீ வைத்துள்ளனர். சிறுமியின் ஐ போனையும் திருட முற்பட்டுள்ளார் நாமன்.

வடமேற்கு சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை காலை நாமன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கடத்தல், திருட்டு, மிரட்டல், தடைசெய்யப்பட்ட போதைமருந்தை வழங்குதல் மற்றும் காயப்படுத்தும் நோக்கத்துடன் தீயினால் சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொடூர குற்றத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பெண்களையும் ஒரு ஆணையும் கைது செய்ய காவல்துறை எதிர்பார்க்கிறது.

கைதான நாமன், ஓகஸ்ட் 14 அன்று ஹொட்டல் அறையொன்றிற்கு தீமூட்டியுள்ளார்.  ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் தீ மூட்டியிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தீ வைத்த பின்னர், உங்களை பற்றிய ஆதாரங்களை அழிக்க ஹொட்டல் அறைக்கு தீ வைத்த விட்டேன் என நாமன், அடையாளம் தெரியாத ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

கொள்ளை சம்பவமொன்றில் மாட்டிய நாமன், இரண்டு வருடங்கள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு பரோலில் வந்த பின்னரே இந்த குற்றத்தை செய்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment