ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தலிபான்களும் உறுதி செய்கின்றனர்.
“இன்று பிற்பகல், எங்கள் ஷியா தோழர்களின் மசூதியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது … இதன் விளைவாக எங்கள் தோழர்கள் பலர் வீரமரணம் அடைந்து காயமடைந்தனர்” என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
வெள்ளிக்கிழமை பிற்பகலில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை வெடிகுண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வ ஆதாரங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் வழங்கப்படவில்லை.
தாக்குதல் நடந்தபோது வெள்ளிக்கிழமை தொழுகையில் 300 நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக, ஆப்கானின் டெலோ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
“Explosion in a Shia mosque in Kundoz city in a central Shia area – explosion took place during Friday prayers inside Sayedabad mosque in KhanAbad port area in Kundoz city 🕌 . Casualties and fatalities in bigger numbers.” Residents in Kundoz province tells me. #Afghanistan pic.twitter.com/Z2B568o6kJ
— MR Dawod Zai💧 (@MrDawodZai) October 8, 2021