25.5 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும்
காலி – அடிக்கடி மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும்
கண்டி – அடிக்கடி மழை பெய்யும்
நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும்
இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும்
திருகோணமலை – சிறிதளவில் மழை பெய்யும்
மன்னார் – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

-வளிமண்டலவியல் திணைக்களம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment