சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் வீடு புகுந்து, கோடாரியை காட்டி மிரட்டி 21பவுண் நகை திருடிசென்ற சம்பவத்துடன் தொடர்புடைய திருடன் ஒருவனை பொலிசார் இன்று கைது செய்தனர்.
யாழ்ப்பாண சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியில் வைத்து திருடன் கைது செய்யப்பட்டான்.
கடந்த ஒக்ரோபர் 31ஆம் திகதி அதிகாலை 12.45 மணியளவில் இணுவிலில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த திருடர்கள் 3 பேர், கோடாரியினை காட்டி வீட்டு உரிமையாளரை மிரட்டி வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையிட்டனர்.
சுமார் 21 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய திருடனே இன்று சிக்கினான்.
கைதான திருடன், தாவடியை சேர்ந்த 26 வயதுடையவன். மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.