அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் யூ.எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமாரவின் (51) படுகொலை தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கொலையை கூலிப்படையினர் மூலம் மேற்கொண்ட, கல்கமுவ புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை மேற்கொள்ள ஒன்றரை இலட்சம் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரிக்கும், பிறிதொருவருக்குமிடையில் ஏற்பட்ட நில தகராற்றில், கிராம சேவகர் பக்கச்சார்பாக நடந்ததாக கூறி, அவரை பழிவாங்கவே இந்த கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரிக்கும், கொலை சந்தேகநபர் ஒருவருக்கும் 18 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1
1