27.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட விமானம்!

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் எயார் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் கீழ் மாட்டிக்கொண்ட காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த விமானம் விற்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டுசெல்லும் வேளையில், அது மேம்பாலத்தின்கீழ் சிக்கிக்கொண்டது.

அதன் இறக்கைகள் அகற்றப்பட்டுவிட்டதாகக் காணொளியில் தெரிகிறது.

அந்த விமானத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என எயார் இந்தியா நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

புதிய உரிமையாளர்கள் விமானத்தைக் கொண்டுசென்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

விமானம் சிக்கிக்கொண்ட காணொளி சமூகத் தளங்களில்வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்திலும் அதுபோன்ற விமானம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment