27.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டது!

வவுனியா, தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை மீறி 50 இற்கும் மேற்பட்டோர் வழிபாடுகளில் ஈடுபட்டதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், ஆலயத்தில் நின்ற 25 பேரினது விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் நிரப்பப்படாத 162 அரச பணியாளர்கள் பதவிகள் – மருதலிங்கம் பிரதீபன்

east tamil

சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

east tamil

கல்வி அமைச்சின் அதிபர் நியமன நடவடிக்கை

east tamil

பாடசாலை மட்டத்திலும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம்

east tamil

Leave a Comment