25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பேஸ்புக் 6 மணித்தியால செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?: உலக பணக்காரர் வரிசையில் 5ஆம் இடத்திற்கு வீழ்ந்தார்!

பேஸ்புக், வட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டதன் விளைவாக அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு சுமார் 6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளச் செயலிகளான இன்ஸ்டகிராம், வட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செயலிகள் நேற்று இரவு முதல் ஆறு மணி நேரத்துக்கு உலகம் முழுவதும் முடங்கின. இதனால் அவற்றின் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஆறு மணி நேரத்துக்கு பேஸ்புக் செயலி செயல்படாத காரணத்துக்காக அந்நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “பேஸ்புக், இன்ஸ்டகிராம், வட்ஸ் அப், மெசஞ்சர் சேவைகள் இப்போது திரும்பக் கிடைக்கின்றன. தடங்கலுக்கு வருந்துகிறேன். நீங்கள் நேசிக்கும், உங்கள் அக்கறைக்குப் பாத்திரமானவர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று பதிவிட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரமாக உலக அளவில் பேஸ்புக் சேவை தடைப்பட்டதன் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் பேஸ்புக் சந்தை மதிப்பு 5% சரிந்தது. இதன் காரணமாக மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு 6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டொலர்களாக சரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜுக்கர்பெர்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

Leave a Comment